ஒரு பன்முகக் கலாச்சார விக்டோரியா

விக்டோரியாவானது உலகத்திலே அதீத மாறுபாடனதும் ஒன்றுபட்டதுமான ஒரு சமூகமாகும். நாம் 200 நாடுகளிலிருந்தும், 260 மொழிகளை அல்லது வட்டார வழக்குகளைப் பேசுகின்றவர்களும், 135 மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களுமாவர்.

விக்டோரியா அரசானது ஒரு பன்முகக் கலாச்சாரச் சமூகத்தை உள்வாங்கிச் சகலரும் சமூகத்தில் பங்கு பற்றி அத்துடன் தமது கலாச்சார, மொழி அல்லது சமயப் பின்னணிகளுக்கப்பால் சேவைகளை அணுக ஆதரவு அளிக்கும்.

விக்டோரியா அரசானது பின்வருவனவற்றில் பன்முகக் கலாச்சாரச் சமூகத்திற்கு உதவும்:

  • சமூக நிகழ்வுகளுக்கு மானியங்கள், மூத்தோர் குழுக்கள், ஒழுங்கமைப்பு ஆதரவு, சமூக மொழிப்பாடசாலைகள் மற்றும் ஏனையத் தொடக்கங்கள்
  • கட்டிட அமைப்புக்கான அல்லது கட்டிட மேம்பாட்டுக்கான மற்றும் வசதிகளுக்கான அடிப்படைத் தேவைக்கான மானியங்கள்
  • சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவர்களுடைய இருப்புக்கான தேவைகளைத் தீர்க்கக்கூடிய முயற்சிகளுக்கும் ஆதரவு தருதல்
  • சர்வ கலாச்சார மற்றும் சர்வ நம்பிக்கையாளர்களின் முயற்சிகளை ஊக்குவித்துக் கலாச்சாரம் மற்றும் மாற்றுச் சமயங்களைப் புரிந்து சமூக இணக்கப்பாட்டை ஊக்கப்படுத்துவது.

நாம் எமது மாறுபாடுகளை அதிமுக்கிய நிகழ்வுகளுடன் பின்வருவன உள்ளடங்கலாகக் கொண்டாடுவோம்: முதன் மந்திரியின் இராப்போசன விருந்துக் கேளிக்கை (Premier’s Gala Dinner) மாறுபட்ட கலாச்சார வாரம் (Cultural Diversity Week), வீவா விக்டோரிய பன்முகக் கொண்டாட்டம் (Viva Victoria Multicultural Festival) மற்றும் திறமைக்கான விக்டோரியப் பன்முகக் கலாச்சார விருதுகள் (Victoria’s Multicultural Awards for Excellence).

உங்கள் மொழியில் தகவல்களைத் தரவிறக்கம் செய்யுங்கள்

Events Calendar

  • 23 Nov

    Opportunities, Choice & Change - A Future Leaders Summit

    more >
  • 23 Nov

    Consultation with Victorian Government - Draft Victorian African Communities Action Plan

    more >
  • 24 Nov

    SalamFest 2017 - Festival of Peace

    more >
  • 25 Nov

    Handel's Messiah

    more >
find more events here >